|
வணக்கம்.
நாடகத்தின்பால் கொண்ட ஆர்வத்தினால்

1960-களின் ஆரம்பத்தில் நானே எழுதி
இயக்கி நடித்து தமிழர் திருநாள், பொங்கல் விழா மேடைகளில் ஓரங்க நாடகங்களை
நண்பர்களுடன் அரங்கேற்றினேன். அதன்பிறகு வானொலியில் நடிக்க வேண்டும் எனும்
ஆர்வத்தினால் 1960களின் பிற்பகுதியில் வானொலியில் பகுதிநேரக் கலைஞனாகச்
சேர்ந்தேன்.
பல வானொலி, தொலைக்காட்சி
நாடகங்களில் நடித்தேன். பின்பு, 1979 -இல், வானொலியில் அறிவிப்பாளராகச்
சேரும் வாய்ப்பு கிட்டியது; பயன்படுத்திக் கொண்டேன். பல நிகழ்ச்சிகளைத்
தயாரித்து அளித்தேன். அவற்றுள் நள தமயந்தி, மனோன்மணியம், சிலப்பதிகாரம்
ஆகிய காவியங்களை திரு ரெ சண்முகம், திரு எம் கே நாராயணன், திரு பி கிருஷ்ணன் நாடக வடிவமாக்க அவற்றை நான் இயக்கி விக்டோ ரியா அரங்கில்
மேடையேற்றியது என்னால் மறக்க முடியாதது. மேலும் மகாபாரதத் தொடரில்
துரியோதனனாகவும் ராமாயணத் தொடரில் இராவணனாகவும் நடித்தது என் பெயருக்கு
புகழ் சேர்த்தது.
இவற்றுக்கிடையே 1990 -ஆம் ஆண்டு நடைபெற்ற சிங்கப்பூர் இந்தியர்
பண்பாட்டுக் கொண்டாட்டங்களின் ஒரு கூறாக நடைபெற்ற நூல் வெளியீட்டு
விழாவில் நான் எழுதிய
"சிங்கப்பூரில் தமிழ் மேடை நாடகங்கள்" எனும் நூலும் வெளியீடு கண்டது
குறிப்பிடத்தக்கது.
தற்போது மூத்த தயாரிப்பாளராக, நாடகம், சிறுகதை, இசையும் கதையும், கவிஞர்
நேரம் ஆகியவற்றைத் தயாரித்து வருவதுடன், அவ்வப்போது அறிவிப்புப் பணியையும்
செய்து வருகிறேன்.
ரசிகர்களே, உங்களுக்காக என் பணி தொடரும்...வணக்கம். |